தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் விதமாக சிறப்பு முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தியது. இந்த தடுப்பூசி முகாம், பலர் தடுப்பூசி போட உதவியாக இருந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அந்த வகையில் கடந்த 8-ந் தேதி 18-வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கடந்த வாரம் 15-ந் தேதி (சனிக்கிழமை) பொங்கல் விடுமுறை என்பதால் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று(22) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 19-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.