• Wed. Dec 25th, 2024

இலங்கையின் கொரோனா நிலவரம்

Jan 29, 2022

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து 65 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 17 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 77 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது.