• Fri. Oct 18th, 2024

வரலாற்றில் இன்று பெப்ரவரி 01

Feb 1, 2022

பெப்ரவரி 1 கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர்.1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான்.

1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான்.

1788 – ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.

1793 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது.

1814 – பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.

1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை (mail-coach) இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.

1835 – மொரிசியசில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சசு மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

1864 – டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.

1880 – யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி சேவையை ஆரம்பித்தது.

1884 – ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.

1893 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் மேற்கு ஒரேஞ்சு நகரில் கட்டி முடித்தார்.

1908 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

1924 – சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1942 – அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ வெளிநாட்டு வானொலி வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.

1946 – நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1946 – அங்கேரி நாடாளுமன்றம் ஒன்பது நூற்றாண்டுப் பழமையான மன்னராட்சியை நீக்கி குடியரசாக அறிவித்தது.

1953 – வடகடல் வெள்ளப்பெருக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.

1958 – எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.

1972 – கோலாலம்பூர் மலேசியாவின் மன்னரால் மாநகரமாக அறிவிக்கப்பட்டது.

1974 – பிரேசிலில் சாவோ பாவுலோ நகரில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் உயிரிழந்தனர், 293 பேர் காயமடைந்தனர்.

1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.

1991 – லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலைய ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதில் 34 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.

1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.

1998 – கிளிநொச்சித் தாக்குதல், 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.

2002 – சனவரி 23 இல் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கடத்தல்காரர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

2004 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் உயிரிழந்தனர், 244 பேர் காயமடைந்தனர்.

2005 – நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

2005 – கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.

2007 – மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர்.

2013 – ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.

2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.