• Tue. Dec 3rd, 2024

இதய நோயை தடுக்கும் தேங்காய்

Feb 5, 2022

தேங்காயில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி மட்டுமின்றி அனைத்து வகையான கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனால் இது உடலுக்கு பல வழிகளில் நன்மையளிக்கிறது. இத்தகைய தேங்காயை இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் இன்னும் சிறப்பான நன்மைகளைப் பெறலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

  • தேங்காயில் நார்ச்சத்து இருப்பதால் இரவு தூங்கும் முன் தேங்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
  • தேங்காயில் உள்ள கொழுப்பு உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை மேம்படுத்தும். இதன் விளைவாக, தேங்காயை இரவு நேரத்தில் சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.
  • உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க தேங்காயை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுத்து, உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
  • உங்களுக்கு பருக்கள் அல்லது சருமத்தில் தழும்புகள் இருந்தால், இவை அனைத்தையும் நீக்க தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • அதுவும் இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
  • தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவராயின், இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் தேங்காயை சாப்பிடுங்கள். இதன் முலம் உங்களின் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.