• Thu. Dec 26th, 2024

வரலாற்றில் இன்று பெப்ரவரி 14

Feb 14, 2022

பெப்ரவரி 14 கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர்.

1014 – திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார்.

1076 – திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார்.

1130 – இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1349 – பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

1400 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது.

1556 – பேரரசர் அக்பர் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.

1779 – அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஜிப்ரால்ட்டர் அருகே இடம்பெற்ற கடல்சமரில் ஒரசியோ நெல்சன் தலைமையில் பிரித்தானியக் கடற்படை எசுப்பானியக் கடற்படையை வென்றது.

1804 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்சே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.

1815 – கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றினர். கண்டி ஒப்பந்தம் மார்ச் 2 இல் கையெழுத்திடப்பட்டது.

1859 – ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1876 – எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.

1879 – சிலி இராணுவத்தினர் பொலிவியாவின் அன்டோபொகஸ்டா துறைமுக நகரைக் கைப்பற்றியதை அடுத்து பசிபிக் போர் வெடித்தது.

1899 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமெரிக்க நடுவண் தேர்தல்களில் பயன்படுத்துவதற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.

1900 – தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.

1912 – அரிசோனா 48வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1918 – சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

1919 – போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.

1924 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் சப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் ரசுத்தோவ் நகர் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: துனிசியப் போர்த்தொடர்: தூனிசியாவில் நேச நாடுகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கி ஒன்று மலாக்கா நீரிணையில் செருமனி-இத்தாலிய நீர்மூழ்கியத் தாக்கி மூழ்கடித்தது.

1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.

1949 – இசுரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.

1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1966 – அவுஸ்திரேலியாவில் முன்னர் பயன்பாட்டில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1979 – ஆப்கானித்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.

1981 – டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் உயிரிழந்தனர்.

1987 – யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1989 – ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.

1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

1989 – சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.

1990 – பெங்களூரில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயங்களுடன் தப்பினர்.

1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.

1998 – கமரூனில் யாவுண்டே நகரில் எண்ணெய்த் தாங்கித் தொடருந்து சரக்குத் தொடருந்துடன் மோதியதில் எரிநெய் கசிந்து வெடித்ததில், 120 பேர் உயிரிழந்தனர்.

1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.

2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.

2004 – மாஸ்கோ அருகே பூங்கா ஒன்றின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 25 உயிரிழந்தனர்.

2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

2005 – லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005 – பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.

2011 – அரேபிய வசந்தம்: பகுரைன் எழுச்சி ஆரம்பமானது.

2017 – செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2018 – தென்னாப்பிரிக்காவின் அரசுத்தலைவர்பதவியில் இருந்து யாக்கோபு சூமா விலகினார்.

2018 – அமெரிக்காவில் மயாமியின் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.

2019 – புல்வாமா தாக்குதல்: இந்தியாவின், காசுமீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்சு-இ-முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், மத்திய சேமக் காவல் படையைச் சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டு, 35 பேர் காயமடைந்தனர்.