• Sun. Nov 17th, 2024

704 நாட்களின் பின் எல்லையை திறந்த அவுஸ்திரேலியா!

Feb 21, 2022


மூடப்பட்ட எல்லையை 704 நாட்களின் பின்னர் அவுஸ்திரேலியா திறந்ததை தொடர்ந்து சிட்னி விமானநிலையத்தில் உறவுகள் மீண்டும் இணைந்தவேளை உணர்பூர்வமான காட்சிகளை காணமுடிந்தது.

அவுஸ்திரேலியா சர்வதேச எல்லையை திறந்ததை தொடர்ந்து குடும்பங்கள் மீண்டும் இணைந்ததால் சிட்னி விமானநிலையத்தில் கண்ணீரும், இசையும்,மகிச்சியும் காணப்பட்டது.

சிட்னி விமானநிலையத்தில் இன்று காலைகாணப்பட்ட வர்த்தக சுற்றுலாத்துறை தொழில்துறை அமைச்சர் டன் டெஹான் சில வருட முடக்கலினால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறைக்கு இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் என தெரிவித்தார்.

நல்வரவு என்ற வாசகம் அடங்கிய சேர்ட்டை அணிந்திருந்த அமைச்சர் சிட்னிவிமானநிலையத்தில் களியாட்டம் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டார்.

மக்கள் ஐக்கியப்படும் விதத்தை பார்ப்பது – கட்டிதழுவுதல்- முத்தங்கள் கண்ணீரை பார்ப்பது அற்புதமாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் எதிர்காலம் ஒளிமயமானதாக காணப்படுகின்றது என தெரிவித்தார்.

எல்லைகளை திறந்து வைப்பதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிட்னி விமானநிலையத்திற்கு இன்று காலை 6.20 மணிக்கு முதலில் லொஸ் ஏஞ்சல்சில் இருந்து குவண்டாஸ் விமானம்வந்து சேர்ந்ததை தொடர்ந்து சர்வதேச போக்குவரத்திற்கான 704 கட்டுப்பாடுகளும் தடைகளும் முடிவிற்கு வந்தன.

இன்று 56 விமானங்கள் அவுஸ்திரேலியா வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது இவற்றில் அனேகமானவை சிட்னி விமானநிலையத்திற்கே வரவுள்ளன.

நியுசவுத்வேல்ஸ் மீண்டும் உலகத்துடன் இணைந்துகொண்டதால் காற்றில் சலசலப்பும்உற்சாகமும் காணப்படுகின்றது என மாநில பிரதமர் டொமினிக் பெரெடொட் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் நீண்ட பயணம் கொவிட் உடனான நீண்ட பயணம் எனஅவர் குறிப்பிட்டார்.

எங்கள் எல்லைகளை இங்கு மாத்திரமல்ல நாடுமுழுவதும் திறந்து வைத்திருப்பது மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள மாநில பிரதம சர்வதேச மாணவர்கள் மீண்டும்இணைவதையும் குடும்பங்கள் மீண்டும் இணைவதையும் நாங்கள் பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாங்கள் உலகத்துடன்இணைந்தோம் எவ்வளவு சாதகமான விடயம் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.

சிட்னிவிமானநிலையத்தில் வருகை கூடத்தில்பயணிகள் கங்காருமற்றும் கோலா பொம்மைககள் – வெஜிமைட் மற்றும் யூகலிப்டஸ் ஸ்பிரிங்குகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

பேருந்தொன்றின்மேல் காணப்பட்ட ஒருவர் அவுஸ்திரேலிய பாடல்களைபாடினார்.

இரண்டு வருடங்களின்பின்னர் லண்டனில்இருந்து வந்துள்ளதாக தெரிவித்த சாம்பிரெய்ன் என்பவர் தெரிவித்தார், அவரை அவரது பாடசாலை நண்பி எம்மா கண்ணீருடன் கட்டியணைத்து வரவேற்றார்.

இங்கு திரும்பி வருவது அற்புதமான அனுபவம் என தெரிவித்த அவர் நான் வருகின்றேன் என அம்மாவிற்கு தெரியாது அவர் அதிர்ச்சியடையப் போகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.