கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் தற்போது சிறுவர்களை தாக்குகின்ற மற்றுமொரு நோய் தொடர்பிலான அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
டொக்சோகராசிஸ் (Toxocariasis) என்ற நோய் இவ்வாறு சிறுவர்கள் இடத்தில் பரவ ஆரம்பித்திருப்பதாக கொழும்பு சிறுவர் வைத்தியசாலையான லேடிசிட்ஜ்வே மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணரான தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.
குறிப்பாக வீடுகளில் மற்றும் தெருக்கலில் உள்ள நாய் மற்றும் பூனைகளிடம் இருந்து சிறுவர்களிடத்தில் இந்த நோய் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. பாடசாலை விடுமுறை காரணமாக இந்த அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
குறித்த விலங்குகளின் உடலில் ஒருவகை புழு உள்ளது. அது சிறுவர்களின் சிறுநீரகம், மூளை, கண்கள் என்பவற்றின் ஊடாக ஊடறுத்துச் சென்று தாக்கக்கூடியவை என்றும் அவர் எச்சரித்தார்.
இதேவேளை இந்தியாவில் சிறுவர்களுக்கு மத்தியில் கொரோனா தொற்று மிகவேகமாக பரவும் அபாயம் இருப்பதாக இன்று எச்சரிக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.