ஐசிசியின் மகளிர் ஒன் டே கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி நியூஸிலாந்தில் இன்று தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 6 ஆம் திகதி பாகிஸ்தானை சந்திக்கிறது. பின்னர் நியூஸிலாந்தை 10 ஆம் திகதியும், மேற்கிந்தியத் தீவுகளை 12 ஆம் திகதியும், இங்கிலாந்தை 16 ஆம் திகதியும் எதிர்கொள்கிறது.
அடுத்து அவுஸ்திரேலியாவுடன் 19 ஆம் திகதியும், பங்களாதேஷூடன் 22 ஆம் திகதியும், தென்னாப்பிரிக்காவுடன் 27 ஆம் திகதியும் விளையாடுகிறது.
கொரோனா சூழல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெறும் இப்போட்டியின் ஆட்டங்கள், நியூஸிலாந்தின் 6 நகரங்களில் நடைபெறவுள்ளன. 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும்.
லீக் ஆட்டங்கள் முடிவில் இரு பிரிவுகளிலும் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதிபெறும்.