• Sun. Feb 2nd, 2025

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேர மின் துண்டிப்பு

Mar 28, 2022

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L -பிரதேசங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V, W – பிரதேசங்களில் காலை 08.30 முதல் மாலை 05.30 வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 5.30 முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது