• Wed. Dec 4th, 2024

விஜயுடன் கைகோர்க்கும் பிரபல இந்தி நடிகை

Mar 31, 2022

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. பிறகு தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை ‘கிரித்தி சனோன்’ கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இதற்குமுன் இந்தியில் வெளியான ஹவுஸ்ஃபுல்4, பரேலி கி பர்ஃபி, போன்ற படங்களில் நடித்து அவை நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.