• Tue. Jan 14th, 2025

ஒரு மீனின் விலை 2.40 இலட்சம் ரூபா; எங்கு தெரியுமா?

Jun 22, 2021

இந்தியாவில் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா மீன் பிடி துறைமுகத்தில் கோதாவரி ஆற்றில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம் அதன்படி நேற்றும் மீனவர்கள் மீன்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒருவரது வலையில் மிக பெரிய அளவிலான மீன் சிக்கியது. இது ‘பிச்’ என்ற வகையை சேர்ந்தது என்றும் இது மிகவும் அரிதானது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர், அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதியினர் அரிய வகை மீன் என்பதால் அதை வாங்க போட்டி போட்டதைத் தொடர்ந்து அந்த மீன் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.

அங்கு திரண்டிருந்தவர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இறுதியில் அதே பகுதியை சேர்ந்த தரகொண்டா என்ற மீன் வியாபாரி, ரூ2.40 லட்சத்திற்கு அரிய வகை மீனை ஏலம் எடுத்தார்.

இந்த மீனின் வயிற்றுப்பகுதியில் உள்ள திரவம் மருந்தாக பயன்படுத்துவதால் இந்த மீனுக்கு மதிப்பு அதிகம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.