நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கியதை எதிர்த்து அவரது தந்தை டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து , படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்ததாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
அதோடு , படம் வெளியாக பெருமுயற்சி எடுத்த தங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டதாகவும் டி.ராஜேந்தர் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.