• Mon. Jan 17th, 2022

ஓடிடியில் வெளியாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்

Oct 2, 2021

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது.

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் இந்த படம் நவம்பர் 3 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள் படக்குழுவை சேர்ந்தவர்கள். ஏனென்றால் இன்னும் படப்பிடிப்பே முழுதாக முடியவில்லையாம். மேலும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் பொங்கலை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.