பிரபல தமிழ் நடிகையும், vj யுமான ரம்யா சுப்ரமணியன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார்.
13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். மேலும், பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து ஓ காதல் கண்மணி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’ என்ற இன்னொரு முகமும் இருக்கிறது. கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அலாதி பிரியம் இவருக்கு உண்டு.
அதேபோல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அதேபோல, தனது சமூக ஊடக பக்கத்திலும் பிட்னஸ் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.