• Wed. Sep 27th, 2023

உலகம் முழுவதும் 23.25 கோடி பேர் பாதிப்பு!

Sep 27, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.25 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 232,576,966 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,761,531 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 209,197,975 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் 18,617,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் உள்ளனர்.