ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் கடுமையான சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறது.
பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தலீபான்கள் கொடூரமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஹீரட் நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களில் 4 உடல்களை தலீபான்கள் இன்று கிரேன் மூலம் கட்டி தொங்கவிட்டனர்.
இதனால், அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள சதுர்க்கத்தில் 4 உடல்களும் தலீபான்கள் தொங்கவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
உயிரிழந்த நிலையில் கிரேன் மூலம் கட்டி தொங்கவிடப்பட்ட 4 பேரும் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அவர்களை போலீசார் கொன்றதாகவும் தலீபான்கள் நகரின் மையப்பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர்.
பரபரப்பான ஹீரட் நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்களின் செயலால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் .