• Thu. Apr 24th, 2025

இலங்கையில் மேலும் 124 பேர் பலி

Aug 12, 2021

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

75 ஆண்களும் 49 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 42 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 406 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 36 ஆயிரத்து 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.