• Sat. Mar 23rd, 2024

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும்

Dec 21, 2021

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட படிப்படியாக கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா டெல்டா வைரசை விட இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மையுடையது என்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுடையது என்றும் உலக சுகாதார மையம் அவ்வப்போது எச்சரித்து வருகிறது.

இந்த நிலையில் ஒமிக்ரான் உலக நாடுகளில் மிக மிக அதிவேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.