
இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவும் அபாயமுள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா 3 வது அலை உச்சம் அடையும் என்று பிரதமர் அலுவலத்திற்கு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
எனவே, வரும் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு மேல் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.