• Sat. Feb 1st, 2025

மர்ம நபர்கள் அளித்த கொரோனா மருந்தை சாப்பிட்டவர்கள் பலி

Jun 27, 2021

கொரோனாவுக்கு குணமாகும் என்று கூறி மர்ம நபர்கள் அளித்த மருந்தினை சாப்பிட்ட 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே கொரோனாவுக்கு மருந்து எனக் கூறி மர்ம நபர் அளித்த மாத்திரையை மூன்று பேர் சாப்பிட்டு உள்ளதை அடுத்து அவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் பெருமாள் மலையில் மருந்து கொடுத்த 2 பேரை பிடித்து மூன்று பேரை கொலை செய்த வழக்கில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இன்னும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவுக்கு மருந்து என்று கூறி யாராவது கொடுத்தால் அதனை சாப்பிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.