• Wed. Feb 5th, 2025

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மருந்தில்லாத வெறும் ஊசி!

Jun 26, 2021

இந்தியா – பீகாரில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறும் ஊசியை மட்டும் செலுத்தியுள்ளார் செவிலியர் ஒருவர்.

பீகார் மாநிலம் சப்ரா நகரில் கொரோனா தடுப்பூசி மையம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. அந்த மையத்திற்கு இரு நண்பர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த நண்பர்களில் ஒருவர் செலுத்தும் போது மற்ற ஒருவர் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனென்றால், அங்கு ஒருவருக்கு வெறும் மருந்தில்லாத ஊசியை செலுத்தியுள்ளனர். உடனே அவரது நண்பருக்கு தொடர்பு கொண்டு உனக்கு தடுப்பூசியே செலுத்தவில்லை, அதில் இருந்த தடுப்பூசியில் மருந்து இல்லை. வெறுமனாக இருந்த ஊசி என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தடுப்பூசி செலுத்தும் போது வெறுமனாக இருந்த ஊசியை செலுத்தும் காட்சி பதிவாகியிருப்பது குறித்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.