தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05) அறிவித்துள்ளார்.
அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட தளர்வுகள் பின்வருமாறு:
- மளிகை, பலசரக்கு, காய்கறிகள், பூக்கடைகள், நடைபாதை கடைகள், இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவை காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி.
- மீன் சந்தைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.
- சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50% டோக்கன் மட்டும் வழங்க அனுமதி. பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% செயல்பட அனுமதி.
- அனைத்து அரசு அலுவலகங்களிலும் 30% ஆட்கள் மற்றும் செயல்பட அனுமதி.
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகங்கள் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வீடு சேவைகள் இ பதிவுடன் அனுமதி.
- மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் ஹார்ட்வேர் மற்றும் உதிரிபாகங்கள் புத்தக கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் இப்படி உடன் செயல்பட அனுமதி ஆனால் ஓட்டுநரை தவிர்த்து இரண்டு பேர் மட்டுமே இதில் பயணிக்க அனுமதி.