• Sun. Jun 16th, 2024

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

Jun 6, 2021

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 21,406 பேரும், மற்ற மாநிலத்தவர் 4 பேரையும் சேர்த்து 21,410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 443 பேர் உயிரிழந்து உள்ளனர். 32,472 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 24 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது,

”தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,365 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,410 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,16,812 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் தற்போது வரை 2,85,46,677 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. நேற்று கொரோனா உறுதியானவர்களில் 11,652 பேர் ஆண்கள், 9,758 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,02,651 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,14,123 ஆகவும் அதிகரித்து உள்ளது.

32,472 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,32,778 ஆக உயர்ந்தது. 463 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 166 பேர் தனியார் மருத்துவமனையிலும், 277 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,571 ஆக அதிகரித்து உள்ளது”