• Sat. Jul 20th, 2024

ரஷ்யத் தடுப்பூசியினைத் தயாரிக்கும் இந்திய நிறுவனம்

Jul 14, 2021

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் கூறியிருக்கிறது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “புனேவில் உள்ள இந்திய சீரம் மையத்தில் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பகிரும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இவற்றை கொண்டு தடுப்பூசி தயாரிப்பதற்கான முதல் கட்டப்பணியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.