• Tue. Dec 5th, 2023

இலங்கையில் மூன்று டெல்டா பிறழ்வுகள்

Aug 18, 2021

இலங்கையில் பரவிகொண்டிருக்கும் டெல்டாவின் புதிய பிறழ்வுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து வௌியிட்ட போதே அவர் தெரிவித்தார்.

அத்துடன் விசேட வைத்திய நிபுணர்கள் அவற்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SA 222V, SA 701S மற்றும் SA 1078 S ஆகிய டெல்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொ​ரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.