• Mon. Sep 9th, 2024

இலங்கை எந்நேரத்திலும் முடக்கப்படலாம்!

Aug 18, 2021

சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு முடக்கப்படும். அதற்கு அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடகச் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் அமைச்சரவை பேச்சாளர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முடக்கம் செய்யக்கூடாது என்ற பிடிவாதமான தீர்மானத்தில் அரசாங்கம் இல்லையெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.