உலகளவில் வாராந்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,162 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 151,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வாராந்த ஆய்வு குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர்,
உலகளவில் வாராந்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலகளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஓர் ஆண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பாகும். இது பல்வேறு நாடுகள் அளித்த கணக்காகும். ஆனால் இதை விட இறப்புகள் அதிகமாக இருக்கலாம்.
ஐரோப்பாவைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் இறப்பு குறைந்து வருகிறது. பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.
கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தும் நாடுகளில் இறப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி மிக முக்கியம் என்று டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.