• Fri. Jul 26th, 2024

தென்னாபிரிக்கா புதிய வகை வைரஸ்க்கு பெயர் வைத்த WHO

Nov 27, 2021

தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பயங்கரமானது.

இதனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை என ஒரு சில நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.

இதேவேளை தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள வைரஸானது இதுவரை கண்டறியப்பட்டதில் வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.