• Thu. Dec 26th, 2024

வரலாற்றில் இன்று ஜனவரி 25

Jan 25, 2022

ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

41 – குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார்.

750 – அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர்.

1348 – இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது.

1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.

1515 – பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார்.

1533 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.

1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1765 – போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது.

1791 – பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர்.

1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.

1918 – உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.

1942 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை முடிவுற்றது.

1947 – தோமசு கோல்ட்சிமித் என்பவர் முதலாவது இலத்திரனியல் விளையாட்டுக் கருவி, “எதிர்மின் கதிர் குழாய் கேளிக்கைக் கருவியைக்” கண்டுபிடித்தார்.

1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன.

1949 – சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.

1949 – இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.

1955 – சோவியத் ஒன்றியம் செருமனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.

1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.

1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற அதியுயர் விருது வழங்கப்பட்டது.

1981 – மா சே துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1993 – வர்ஜீனியாவில் அமெரிக்காவின் சிஐஏ தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.

1993 – கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.

1994 – நாசாவின் ‘கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1998 – கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.

1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2002 – விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.

2004 – ஆப்பர்சூனிட்டி தளவுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.

2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

2009 – முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.

2011 – எகிப்தியப் புரட்சியின் முதல் அலை ஆரம்பமானது.

2013 – வெனிசுவேலாவில் சிறைச்சாலைக் கலவரம் ஒன்றில் 50 பேர் உயிரிழந்தனர்.