• Mon. Dec 23rd, 2024

வரலாற்றில் இன்று டிசம்பர் 18

Dec 18, 2021

டிசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 218 – திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன.

1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது.

1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.

1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.

1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.

1833 – உருசியப் பேரரசின் நாட்டுப்பண் சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்” முதல் தடவையாக பாடப்பட்டது.

1865 – அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

1878 – அல்-தானி குடும்பம் கத்தாரின் ஆட்சியாளர்கள் ஆனார்கள்.

1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.

1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.

1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

1935 – லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: உலகப் போரின் முதலாவது வான்போர் எலிக்கோலாந்து பைட் சண்டை இடம்பெற்றது.

1941 – ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் அந்நாட்டின் மீது படையெடுத்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் சப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.

1958 – உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், “ஸ்கோர்”, ஏவப்பட்டது.

1966 – சனிக் கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.

1973 – சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1973 – இசுலாமிய வளர்ச்சி வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1981 – உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி து-160 சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.

1987 – லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.

1990 – ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.

2005 – சாட் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.

2006 – மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 118 பேர் உயிரிழந்தனர்.

2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றது.

2012 – தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.

2017 – வாசிங்டன், ஒலிம்பியா நகருக்கருகில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.

2019 – அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்கக் கீழவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 33 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.