சனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும்.
இன்றைய தின நிகழ்வுகள்
661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செர்ஜியசு புனிதப்படுத்தப்பட்டார்.
946 – புதிதுப் பேரரசின் மன்னரினால் கலிபா அல்-முசுதாக்பி குருடாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார்.
1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து பின்வாங்கினர்.
1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் உருசியாவை வென்றது.
1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
1834 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் தொழிற்சங்க சர்ச்சையைத் தீர்ப்பதற்காக முதன் முதலாகப் பயன்படுத்த உத்தரவிட்டார்.
1861 – கேன்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.
1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் சோசோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1886 – செருமனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1891 – லில்லியுகலானி ஹவாய் இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளராக முடிசூடினார்.
1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் செருமனியின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.
1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.
1940 – சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.
1980 – ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.
1989 – பனிப்போர்: அங்கேரி தென் கொரியாவுடன் தூதரக உரைவை ஏற்படுத்தியது.
1996 – பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் அணுகுண்டு சோதனைகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள லா பெனீசு ஓப்பரா மாளிகையான தீயினால் அழிந்தது.
2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.
2013 – கசக்சுதானில் அல்மாத்தி நகரில் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
2017 – கியூபெக் துப்பாக்கிச் சூடு, 2017: கியூபெக்கில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.