• Sun. Jul 21st, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 3

Jul 3, 2021

சூலை 3 கிரிகோரியன் ஆண்டின் 184 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 185 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார். லிசீனியசு பைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார்.

987 – இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.

1035 – முதலாம் வில்லியம் நோர்மண்டியின் கோமகனாக முடிசூடினார்.

1594 – அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது.

1608 – கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.

1754 – ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.

1767 – பிட்கன் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமை தாங்கினார்.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொன்றனர்.

1778 – புருசியா ஆஸ்திரியாவின் மீது படையெடுத்தது.

1844 – ஐசுலாந்தில் கடைசிச் சோடி பெரிய ஆக்கு பறவைகள் கொல்லப்பட்டன.

1848 – அமெரிக்கக் கன்னித் தீவுகளில் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.

1849 – பிரான்சு உரோமைக் குடியரசு மீது படையெடுத்து திருத்தந்தை நாடுகளை மீள்வித்தது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டையின் கடைசி நாள்.

1866 – புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.

1867 – தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1872 – 1823 இல் ஆரம்பிக்கப்பட்ட பட்டிக்கோட்டா குருமடம் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.

1890 – ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.

1944 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் செஞ்சேனைப் படையினரால் நாட்சி செருமனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1952 – புவேர்ட்டோ ரிக்கோவின் அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது.

1969 – விண்வெளிப் போட்டி: சோவியத் ஒன்றியத்தின் என்1 என்ற ஏவூர்தி ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.

1970 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் போல்சு என்ற இடத்தில் ஐரிசு தேசியவாதிகளைத் தேடும் பணிக்காக 3 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. நூற்றுக்கணக்கானோர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

1970 – பிரித்தானிய விமானம் எசுப்பானியாவில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

1988 – அமெரிக்கப் போர்க் கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.

2006 – பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 எக்சு.பி14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.

2013 – எகிப்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது முர்சி இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.