• Sat. May 18th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 25

Jun 25, 2021

சூன் 25 கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1632 – எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினார்.

1658 – எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.

1678 – வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1741 – ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார்.

1788 – வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.

1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்தனர். ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர்.

1900 – தாவோயிசத் துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் மொகாவோ கற்குகைகள் தொடர்பான அரிய கையெழுத்துப்படிகளைக் கண்டுபிடித்தார்.

1910 – ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நிறவேற்றியது.

1935 – சோவியத் ஒன்றியத்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு அதிகாரப்பூர்வமாக செருமனியிடம் சரணடைந்தது.

1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, செஸ்டசோவா வதைமுகாமில் யூதர்கள் நாட்சிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.

1950 – வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.

1960 – பனிப்போர்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர்களாகப் பணியாற்றிய குறியாக்கவியலாளர்கள் இருவர் மெக்சிக்கோவிற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு சென்றனர்.

1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.

1975 – போர்த்துகல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.

1981 – மைக்ரோசாப்ட் வாசிங்டனில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1983 – இலண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

1991 – குரோவாசியாவும் சுலோவீனியாவும் யுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தன.

1996 – சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

1997 – ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.

1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.

2007 – கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

2017 – ஏமனில் 200,000 இற்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.