• Wed. Jan 1st, 2025

வரலாற்றில் இன்று நவம்பர் 23

Nov 23, 2021

நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.

1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார்.

1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர்.

1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன்.

1510 – இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர்.

1857 – ஐக்கிய இராச்சியத்தின் சிபெல்லா என்ற பயணிகள் கப்பல் கொழும்புக்கு அருகே மூழ்கியதில் நால்வர் உயிரிழந்தனர்.

1867 – இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக மூன்று அயர்லாந்துத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.

1890 – நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்லெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1914 – மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.

1924 – அந்திரொமேடா “நெபுலா” உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தேயுள்ள பிறிதொரு விண்மீன் பேரடை என்ற எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு, முதற்தடடையாக நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: ராவல்பிண்டி என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியப் போர்க் கப்பல்களினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: தரவா, மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.

1946 – வியட்நாம், ஆய் பொங் நகர் மீது பிரெஞ்சுக் கடற்படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1955 – கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆத்திரேலியாவுக்கு கைமாறியது.

1956 – தமிழ்நாடு, அரியலூரில் நடந்த தொடருந்து விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.

1959 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் ஸ்திராஸ்பூர்க் நகரில் “ஐரோப்பிய ஒருங்கிணைப்பு” பற்றிய தனது எண்ணங்களைத் தெரிவித்தார்.

1971 – சீனப் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1974 – எத்தியோப்பியாவில் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட 60 பேர் இடைக்கால இராணுவ அரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1978 – கிழக்கு மாகாண சூறாவளி, 1978: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வீசிய கடும் புயலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற 6.9 அளவு நிலநடுக்கத்தினால் 4,800 பேர் வரை உயிரிழந்தனர்.

1985 – எகிப்தியப் பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

1992 – முதலாவது திறன்பேசி, ஐபிஎம் சைமன், லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோசு அருகில் வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

2001 – கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில் கையெழுத்திடப்பட்டது.

2003 – வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சே பதவி விலகினார்.

2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2006 – ஈராக்கில் சாதிர் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டு 257 பேர் காயமடைந்தனர்.

2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

2007 – அர்கெந்தீனாவுக்குத் தெற்கே எக்சுபுளோரர் என்ற பயணிகள் கப்பல் பனிமலை ஒன்றில் மூழ்கியதில் 154 பேர் கொல்லப்பட்டனர்.

2009 – மகுயிண்டனாவோ படுகொலை: பிலிப்பீன்சில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2011 – அரேபிய வசந்தம்: யெமனில் 11 மாதங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யேமனிய அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.