• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 8

Nov 8, 2021

நவம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 312 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1519 – எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார்.

1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1576 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர்.

1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.

1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன.

1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது.

1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், யாழ்ப்பாணத்தில் கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு சான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரித்தானியாவின் டிரெண்ட் என்ற அஞ்சல் கப்பலை வழிமறித்த அமெரிக்காவின் ‘சான் யெசிண்டோ கப்பல் இரண்டு கூட்டமைப்பு தூதர்களைக் கைது செய்தது.

1889 – மொன்ட்டானா அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

1892 – கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.

1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1901 – ஏதென்சு நகரில் கத்தோலிக்க நற்செய்திகளின் கிரேக்க மொழிபெயர்ப்பு சர்ச்சையை அடுத்து கலவரம் ஏற்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

1917 – உருசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரை உள்ளடக்கிய மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.

1923 – மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிராங்கோயிசப் படைகள் மத்ரித் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு மத்ரித் முற்றுகை ஆரம்பமானது.

1939 – மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலி கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.

1950 – கொரியப் போர்: அமெரிக்க வான்படை வட கொரிய மிக்-15 விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது.

1957 – அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்கும் ஒனலூலுவிற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

1957 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது ஐதரசன் குண்டை பசிபிக் பிராந்தியத்தில் கிரிபட்டி தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.

1965 – சாகோஸ் தீவுக்கூட்டம், அல்டாப்ரா, பார்க்கார், டெ ரோச்சசு ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1965 – பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1977 – வெர்ஜினாவில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

1987 – வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – சதாம் உசேன் உடனடியாக ஆயுதக்களைவில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எச்சரிக்கை விடுத்தது.

2006 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 – பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2011 – 2005 யூ55 என்ற சிறுகோள் பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.

2013 – சூறாவளி ஹையான், பிலிப்பீன்சில் விசயன் தீவுகள் பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.

2016 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார்.