
ஆபத்தான வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் சமூக ஊடக பிரபலமான அழகி ஒருவர், செல்பி ஒன்றை எடுக்கும் முயற்சியின்போது பரிதாபமாக பலியாகியுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்து ஹொங்ஹொங்கில் வாழ்ந்து வந்தவரான Sophia Cheung (32), சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம். மலையுச்சிகள் போன்ற அபாயகரமான இடங்களில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது அவரது வழக்கம்.
தற்போது அதேபோல் போஸ் கொடுக்கும் முயற்சியே அவரது உயிரைப் பறித்துள்ளது. ஹொங்ஹொங்கிலுள்ள Ha Pak Lai park என்ற இடத்தில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சி ஒன்றின் முன்னால் நின்று செல்பி ஒன்றை எடுக்க முயன்றுள்ளார் Sophia.
திடீரென கால் இடற, தனது நண்பர்கள் கண் முன்னாலேயே 16 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார் Sophia.
மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
35,000 ரசிகர்கள் பின்தொடரும் சமூக ஊடக பிரபலமாக இருந்த Sophia, செல்பியால் உயிரிழந்தவர்கள் என்ற பட்டியலில் சேர்ந்து விட்டார்.