தேங்காயில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி மட்டுமின்றி அனைத்து வகையான கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனால் இது உடலுக்கு பல வழிகளில் நன்மையளிக்கிறது. இத்தகைய தேங்காயை இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் இன்னும் சிறப்பான நன்மைகளைப் பெறலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
- தேங்காயில் நார்ச்சத்து இருப்பதால் இரவு தூங்கும் முன் தேங்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
- தேங்காயில் உள்ள கொழுப்பு உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை மேம்படுத்தும். இதன் விளைவாக, தேங்காயை இரவு நேரத்தில் சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.
- உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க தேங்காயை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுத்து, உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
- உங்களுக்கு பருக்கள் அல்லது சருமத்தில் தழும்புகள் இருந்தால், இவை அனைத்தையும் நீக்க தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- அதுவும் இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
- தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவராயின், இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் தேங்காயை சாப்பிடுங்கள். இதன் முலம் உங்களின் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.