• Thu. Nov 21st, 2024

ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்! வரலாற்று பதிவு

Nov 20, 2021

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்க ஜனாதிபதியாக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்து குணமாகும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை தற்காலிகமாக , துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு (Kamala Harris) வழங்கி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஜனாதிபதி பைடனுக்கு (Joe Biden) மயக்க மருந்து தந்து மருத்துவ சோதனை நடந்ததால் கமலாவுக்கு தற்காலிக அதிகாரம் தரப்பட்டது.

எனினும் 1.25 மணி நேரம் அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கையில் கமலாஹாரிஸ் (Kamala Harris) அமரவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பணியை தொடங்கினார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தினூடாக அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) பெற்றுள்ளார்.