• Sat. Jul 20th, 2024

உக்ரைனிலிருக்கும் 1 லட்சம் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அமெரிக்கா

Mar 25, 2022

ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இருந்து 35 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவேகியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் 1 லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “1 லட்சம் உக்ரைன் அகதிகளை அமெரிக்கா வரவேற்கும்” என தெரிவித்தார். உக்ரைன் அகதிகளுக்கு அமெரிக்கா கூடுதலாக உதவ வேண்டும் என்று பல்வேறு உதவி அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

அதைத்தொடர்ந்து உக்ரைன் அகதிகளை அமெரிக்கா வரவேற்கும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி வந்தது. இந்த தருணத்தில் இப்போது 1 லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்பதாக அமெரிக்கா கூறி உள்ளது.