• Sun. Jan 19th, 2025

கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முகங்கள் கொண்ட பிரபல பெண்மணி உயிரிழப்பு!

Aug 30, 2021

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் செயல்பாட்டாளரும், 43 ஆவது சான்றோர் சந்திப்பில் தமிழ் சான்றோராக கலந்துகொண்டவருமான, கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முகங்கள் கொண்ட நமது அன்பிற்கும் மேலான செல்வி. உதயகுமாரி பரமலிங்கம் என்ற நிலா அவர்கள், தான் ஆற்றிய சீரிய தமிழ்ப்பணிகளை நிறைவுசெய்து நம்மிடம் கையளித்துவிட்டு, இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தியை வருத்தத்தோடு பகிர்கிறோம்.

அவர் ஆற்றிய தமிழ்ப்பணியும், அவரின் தன்னம்பிக்கை பேச்சுகளும் என்றென்றும் அவர் புகழை சொல்லிக்கொண்டே இருக்கும்.

அவர் பிரிவால் வாடும் அவரது பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
ஐக்கிய ஐராச்சியத் தமிழ்த்துறை