• Mon. Jun 5th, 2023

கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழப்பு

Jul 7, 2021

கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக கடல் உயிரியலாளரான Chris Harley வன்கூவரின் Kitsilano கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மரணத்தின் வாசனையை தான் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Chris. கடற்கரை முழுவதிலும் mussels, clams, sea stars மற்றும் நத்தைகள் முதலான சிப்பி வகை உயிர்கள் உயிரிழந்து கிடப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன், அவை இறந்து அழுகிப்போனதால் அங்கு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடற்கரை வாழ் உயிரினங்களைக் கொன்றிருக்கலாம் எனவும் அவர் கருதுகிறார்.

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இறந்து அழுகிப்போன இந்த கடல் உயிரினங்களால் தண்ணீரின் தரமும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.