• Tue. Oct 15th, 2024

கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரி !

Oct 25, 2021

கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி நாடளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி 16,051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்காபரோ—Rouge Park தொகுதியிலிருந்து ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஹரி நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், மூன்றாவது முறையாக ஸ்காபரோ—Rouge Park தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.

ஸ்காபரோ – Rouge Park இல் வசிப்பவர்களுக்கு சேவை செய்து அயராது உழைப்பதைத் தொடர்வேன்.

உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கனடா தொடர்ந்து முன்னணி வகிக்கும் என்பதை உறுதி செய்வேன் என ஹரி ஆனந்தசங்கரி பதிவிட்டுள்ளார்.