நள்ளிரவுக்குள் கனடா – அமெரிக்கா இடையிலான பாலத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால், 100,000 கனேடிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் கனேடிய பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.
உண்மையில், இரவு 7.00 மணிக்குள் பாலத்தை விட்டு கலைந்து செல்லவேண்டும் என ஏற்கனவே பொலிசார் சாரதிகளுக்கு கெடு விதித்திருந்தார்கள். ஆனால், அதையும் மீறி போராட்டம் தொடர்வதையடுத்து, தற்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடைசி நடவடிக்கையாக இராணுவத்தை களமிறக்கும் திட்டமும் கையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.