• Tue. Oct 15th, 2024

ஆடற்கலை சகோதரிகளின் பரத அரங்கேற்றம்!

Aug 31, 2021

புலம்பெயர் மண்ணில் நீண்டநாட்களாக முடங்கியிருந்த கலைத்தாயின் முகத்தில் இன்முகநகை மீண்டும் இழையோடவைக்கும் வகையில் ஒரு பெரு அரங்கநிகழ்வை கிறிபீல்ட் ஆடற்கலாலயம் வழங்கவுள்ளது.

நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமாரின் கிறிபீல்ட் ஆடற்கலாலயத்தின்பெருமைமிகு மாணவிகளான ரோசிகா ராசிகா சகோதரிகளின் இந்த அரங்க நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (04.09.21) அன்று Rheinhausen அரங்கில் இடம்பெறவுள்ளது.

ஜேர்மனி னுரளைடிரசபபகுதியில் வசிக்கும் ரோகினி ரவிக்குமார் தம்பதியின் புதல்விகளின் இந்த பரதநாட்டிய அரங்கேற்றம் குருவின் ஆசிமற்றும் அயராத உழைப்பு மற்றும் நெறியாழ்கையுடனும் அவரது புதல்வரும் ஆடற்கலை வல்லுனருமான நிமலன் சத்தியகுமாரின் நட்டுவாங்கம் உட்பட்ட தலைசிறந்த வாத்தியக்கலைஞர்களின் பங்களிப்புடனும் அவையோர் பிரசனடனத்துடனும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக ஜேர்மனியலுள்ள சிவசக்தி நர்த்தனத்ரா நாட்டியப் பள்ளியின் நிறுவனர்ஸ்ரீமதி ரிஷாந்தினி சஞ்ஜீவன் (Kalakshetra Chennai) கலந்து சிறப்பிற்கின்றார்.

மேலும்சிறப்பு பேச்சாளர்களாக ஜேர்மனியின் பிரபலதமிழ் பத்திரிகையான வெற்றிமணியின் சிவத்தமிழ் ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன், ஜேர்மனி டுயூஸ்பேர்க்கிலிருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையின்ஆசிரியர் சிவராசா, முல்கைம் நகரில்வசித்துவரும் தமிழ் ஆசிரியை கோசல்யா சொர்ணலிங்கம், ஆடற்கலாலய உதவி ஆசிரியர் தீபனா தர்மபாலனும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வினை பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஐபிசி தமிழ் தொகுப்பாளர் ஜீவமுகுந்தன் தொகுத்து வழங்குகின்றார்.

அவருடன் இளம் அறிவிப்பாளர்களாக அனீனா தேவரவீந்திரன், தகாலினி அசோகன், சாமிலி அசோகன் ஆகியோரும் இணைந்து கொள்கின்றனர்.

பிற்பகல் 14.30 மணிமுதல் இரவு 9:00 மணிவரை இந்த வண்ணமய ஆடற்கலை அரங்கை நிறைக்க காத்துள்ளது. தெய்வீக ஆடற்கலையை தமக்கே உள்ள இயல்பான கலைஞானத்துடன் கற்றுத்தேர்ந்த ரோசிகா ராசிகா சகோதரிகள் இசைத்துறையிலும் பெரு ஆர்வம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.