• Fri. Mar 14th, 2025

தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்தவுள்ள பிரபல நாடு!

Nov 15, 2021

ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த அந் நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், சுமார் ஒரு கோடி பேர் மக்கள் தொகை உள்ள ஆஸ்திரியாவில், 65 சதவிகதம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது.

எனவே தடுப்பூசி போடாதவர்களிடம் இருந்து தொற்று பரவுவதை தடுப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது தாங்கள் அண்மையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை காட்ட முடியாதவர்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீடுகளை விட்டு வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.