உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்பதும் இதனை அடுத்து இந்தியாவுக்கு உலக நாடுகளின் உதவிகள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வந்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவியும் குவிந்துள்ளது.
இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் இந்தியாவுக்கு ரூபாய் 113 கோடி நிதி உதவி செய்வதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
இரண்டு அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் வகையில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கும், சுகாதார பணிகளுக்காகவும் ரூபாய் 113 கோடி கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.