• Sun. Dec 8th, 2024

தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய 12 இறைவன் போற்றி பாடல் நூல்கள்!

Aug 13, 2021

தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. அதன்படி 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அன்னை தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த முயற்சியின் மூலம், கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.