• Sat. Dec 7th, 2024

இந்தியாவில் கைதாகிய 38 இலங்கைப் பிரஜைகள்

Sep 20, 2021

இந்தியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த நிலையில் கைதாகிய 38 இலங்கைப் பிரஜைகள் குறித்து அந்நாட்டுப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை நடத்திவருகிறது.

கர்நாடகா மாநிலத்தின் மெங்களூருவில் வைத்து கடந்த ஜுன் மாதம் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் அவர்கள் நுழைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சார்ந்த விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்ற இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, நேற்று(19) மட்டும் ராமேஷ்வரம் கடலோரப் பிரதேசத்தில் 03 கிராமங்களுக்குச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

மேலும் இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.