இந்தியாவின் பெங்களூர் கஸ்தூரி நகர் பகுதியில் நேற்று மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில் முன்னதாகவே அதில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த மூன்றாவது கட்டடம் இது ஆகும்.
அடித்தளம் பலமாக இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள எட்டு பிளாட்டுகளில் மூன்று பிளாட்களில் மட்டுமே குடியிருந்த மக்கள் கட்டடம் இடிந்து விழக்கூடும் என முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.