இந்தியாவில் கொரொனாவின் இரண்டாம் பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகக் தொற்று குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 45வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அதோடு பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க நிறுவன தயாரிப்பான மாடர்னா கொரொனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்க்கு இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு குறையும் எனக் கூறப்படுகிறது.